குவாட்டர் வாங்கினால் சைட் டிஷ் இலவசம்.. கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை படுஜோர்!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 2:04 pm

இன்று மிலாடி திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அரசு விடுமுறை மற்றும் அறிவித்து இன்று ஒரு நாள் தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் இயங்கக்கூடாது என அறிவிப்பு அறிவித்து இருந்தது.

அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் இயங்கக்கூடாது என உத்தரவு பரப்பியித்திருந்தனர்.

Illegal Liquor Sales

ஆனால் தமிழக அரசு உத்தரவு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை மீறி திண்டுக்கல் ஓடைப்பட்டி, வடமதுரை, சாணார்பட்டி, கோபால்பட்டி, சின்னாளப்பட்டி, வெள்ளோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுபான உரிமையாளர்கள் முன்கூட்டியே மதுபான கடைகளில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு இன்று அதிகாலை முதல் இருந்தே அரசு மதுபான கடையில் அருகிலேயே உத்தரவுகளை மீறி மதுபானங்கள் படுஜோராக விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: 200 தோப்புக்கரணம் போட வைத்த தலைமையாசிரியை : நடக்க முடியாமல் தவித்த 50 பள்ளி மாணவிகளுக்கு சிகிச்சை!

மேலும் மது பிரியர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக தண்ணீர் பாட்டில், ஊறுகாய், தின்பண்டங்களையும் இலவசமாக கொடுத்து மது பிரியர்கள் எந்த விதத்திலும் கவலைப்படாத அளவிற்கு மதுபானங்கள் மிகச் சிறப்பாக ஜோராக விற்பனை செய்து வருகின்றனர்.

அரசு விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?