சிறுத்தை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம் : அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஆறுதல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 9:21 am
Minister - Updatenews360
Quick Share

சிறுத்தை தாக்கியதில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேயிலை தோட்டத் தொழிலாளியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் சிறுகுன்றா என்ற தனியார் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அணில் ஓராண் என்பவரை இரு தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று தாக்கியது.


இதனை அடுத்து அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவரை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் 10,000 நிவாரண தொகையினை வழங்கி அணில் ஓரானின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 241

0

0