டீக்கடை பெஞ்சில் டிஜிபி சைலேந்திர பாபு : புகை பிடித்தவர்களிடம் அறிவுரை கூறிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 2:28 pm

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்து டீக்கடையில் வாழைப்பழம் மற்றும் டீ சாப்பிட்டுவிட்டு கடையில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு இருந்தவர்களிடம் புகை பிடிப்பது மிகவும் உடல் நலத்திற்கு கேடு என டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு இலக்கு படையில் பயிற்சி பெற்று வரும் IFS அதிகாரிகளை நேற்று சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு சத்தியமங்கலத்தில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் வழக்கம்போல் இன்று காலை உடற்பயிற்சி செய்துவிட்டு சத்தியமங்கலம் அருகே உள்ள சின்னட்டிபாளையம் என்ற கிராமத்து டீக்கடைக்கு சென்ற அவர் கடையில் வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு விட்டு கிராமங்களில் மட்டுமே இதுபோன்ற இயற்கையான வாழை பழங்கள் கிடைப்பதாகவும் சென்னை பகுதிகளில் இதுபோன்ற வாழைப்பழங்கள் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

பின்னர் அக்கடையில் டீ வாங்கிக் குடித்த அவர் அருகில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருவர்களிடம் தயவு செய்து புகை பிடிக்க வேண்டாம் அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு எனக் கூறிய அவர் புகைப்பிடிப்பதை தவிர்த்து விட்டு கிராமங்களில் காலை டீ‌ கடைகளுக்கு பசும்பால் கொடுக்கும் நீங்கள் மாட்டிலிருந்து கரக்கும் முதல் பாலை குடியுங்கள் உங்கள் உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும் என அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!