கோவை அருகே பயங்கர தீ… மளமளவென பற்றியதால் 50 குடிசைகள் எரிந்து நாசம் : தவிக்கும் மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 9:13 am

கோவை அருகே பயங்கர தீ… மளமளவென பற்றியதால் 50 குடிசைகள் எரிந்து நாசம் : தவிக்கும் மக்கள்!

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிக்கரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் இன்று மதியம் திடீரென்று குடிசை வீடுகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது இதில் 50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் ஏரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் 50 மேற்பட்ட குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

மேலும் படிக்க: BJP முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்.. விடுமுறை அறிவித்த CONGRESS அரசு!

அதிக வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!