கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்… தாமிரபரணிக்கு நேர்ந்த கதி ; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 7:52 pm
Quick Share

தாமிரபரணி நதியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியானது வற்றாத ஜீவநதியாக உள்ளது. மேலும், இந்த நதியானது தமிழகத்தில் பொதிகை மலையில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கும். தமிழகத்தில் தொடங்கி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரு சிறப்பு நதியாக உள்ளது.

தாமிரபரணி நதியானது கடந்த சில வருடங்களாக குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் ஆய்வுகளை செய்து அதனை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாமிரபரணி வடகால் வாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக தண்ணீர் இல்லாததால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், வாய்க்காலில் உள்ள மீன்கள் அனைத்தும் குவியல் குவியலாக செத்து மிதக்கிறது. மேலும், செத்து மிதக்கும் இந்த மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

மிகவும் பாரம்பரியமிக்க மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் போற்றக்கூடிய இந்த வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் தண்ணீர் இல்லாததால் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 285

0

0