தஞ்சையில் கோர விபத்து… தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் 4 பேர் பலி ; 7 பேர் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 9:31 am

தஞ்சையில் தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் இருந்த வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர். தஞ்சை மாவட்டம் சேருபாவாசத்திரம் அருகே கார் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கார் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வேறு ஏதேனும் காரணமா.., என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?