குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 9:56 am
Quick Share

திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர் வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய , நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடவாசல் பேருந்துநிலையம் முன்பு, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் இனியன் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கொடிகம்பம் பிடுங்கப்பட்டு காணாமல் போனது. இதனை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் அகற்றியதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, திருவாரூர் வடக்கு மாவட்டம் குடவாசல் பேருந்துநிலையம் முன்பு குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் அகற்றப்பட்டதை கண்டித்தும், திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான கலந்துகொண்டு ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் குடவாசல் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திருச்சியில் மாநாடு நிறைவடைந்த உடன் வரும் 31. 1 .2024 அன்று குடவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என்டி. இடிமுரசு, நன்னிலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மயிலையன், மாநில துணைச்செயலாளர் திருமாறன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதாஇனியன் மற்றும் நிர்வாகிகள் ஆ.தமிழ், உ.அமுதவளவன், கோவி.கணேசன் பால்கிட்டு, உலகநாதன், அப்புவினோத், செல்லூர்அறவாணன், சுடர்வளவன், சரவணன், மஞ்சக்குடி செந்தில் , நேருநகர் ராஜா, மாரியப்பன், இபி .செல்வராஜ் , ஆசிரியர் செல்வராஜ் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

Views: - 291

0

0