கருணாநிதி ஊழல்வாதி இல்லைனு நிரூபிக்க முடியுமா.. பெண் நிர்வாகி கைது திமுகவின் கோழைத்தனம் : கோவை பாஜக தலைவர் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 1:32 pm
Balaji - Updatenews360
Quick Share

பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்கியிடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது குறித்து பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், உமா கார்கியை கைது செய்ததற்கு பாஜக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இது திமுகவின் கோழைத்தனத்தை தான் காட்டுகிறது.

தேசிய மகளிர் ஆணைய தலைவி குறித்து அவதூறு பேசியவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டால் அதற்கு நீங்கள் மறுக்கருத்து பதிவிடுங்கள், உங்களால் அந்த பதிவில் உள்ளதை மறுக்க முடியாமல் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தியது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறீர்கள்.

இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். இது போன்ற சமயங்களில் நெஞ்சு வலிக்கிறது என்று தரையிலும் காரிலும் உருள மாட்டோம் என அமைச்சர் செந்தில் பாலாஜியை சுட்டிக்காட்டினார்.

ஒரு பெண்ணை காலையில் கைது செய்வதற்கு திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது?. எதையும் நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் தங்களுக்கும் சட்டம் தெரியும்.

மத்திய அரசும் நீதிமன்றமும் நீங்கள் செய்வதை பார்த்துக் கொண்டுதான் உள்ளது. உமா கார்கி கலைஞரைப் பற்றி பதிவிட்டிருந்தால் அது தவறு என நிரூபியுங்கள், நான் கூறுகிறேன் அவர் கலைஞரைப் பற்றி பதிவிட்டது சரிதான்.

கலைஞர் ஊழல்வாதி தானே?, அது இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?.சர்க்காரியா கமிஷனே கலைஞர் ஊழல்வாதி தான் என்று அந்த காலத்திலேயே கூறியுள்ளது. திருட்டு ரயில் ஏறி வந்த கும்பலுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது.

ஒவ்வொரு கைக்கடிகாரத்தையும் 5 கோடி 10 கோடிக்கு கட்டி உள்ளீர்கள், இது குறித்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கைது செய்து வருகிறீர்கள். பாஜக தொண்டர்களை கைது செய்யும் இந்த வேகத்தை தமிழக அரசின் திட்டத்தில் காண்பித்து இருந்தால் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக வந்திருக்கும் என தெரிவித்தார்.

Views: - 309

0

0