மயானத்தில் அரை நிர்வாணமாக கிடந்த வாலிபர் சடலம் : கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை…

Author: kavin kumar
11 February 2022, 1:27 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மயானத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள மயானத்தில் இறந்த ஒருவரின் அஸ்தி உறவினர்கள் எடுக்கச் சென்றபோது, பிணம் எரித்த இடத்தின் அருகே அரை நிர்வாணமாக வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்த வாலிபர் திண்டுக்கல் மேற்கு மரியாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக் ராஜா என தெரியவந்தது.

இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து நடந்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நேற்று வேடப்பட்டி அருகே உள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. வாலிபரை கொலை செய்து பிணம் எரிந்த இடத்தின் அருகே போட்டு விட்டுச் சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 359

0

0