வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி.. கொலை செய்ய தேடும் கும்பல் : மாலையும் கழுத்துமாக காவல்நிலையத்தில் தஞ்சம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 5:51 pm

வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி.. கொலை செய்ய தேடும் கும்பல் : மாலையும் கழுத்துமாக காவல்நிலையத்தில் தஞ்சம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பெண் லெனின் மெர்சி 30 வயது. இவர் திருச்சி JM no | நீதிமன்றத்தில் OA வாக பணிபுரிந்து வருகிறார்.

கிறிஸ்துவ வன்னியர் சாதியை சேர்ந்தவர் இவருக்கும் திண்டுக்கல், தாமரைப்பாடி, அண்ணாநகரில் இந்து, பள்ளர் சாதியை சேர்ந்த சேட்டு மகன் நாகராஜன் என்பவரும் கடந்த 07 வருடமாக காதலித்து காதலித்து வந்துள்ளனர். நிலையில் இருவரும் காதலிக்கும் விசயம் தெரிந்து இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

சாதிமாறி திருமணம் செய்ய எதிர்த்து வந்ததோடு, வீட்டை மீறி திருமணம் செய்தால் எங்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக பெற்றோர்கள் கூறி வந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து தனது வீட்டை விட்டு வெளியேறிய லெனின் மெர்சி தனது காதலர் நாகராஜன் அவர்களோடு திருச்சி காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் இது குறித்து தனது தந்தை விட்டார் தங்களை கொலை செய்வதற்காக தேடி வருவதாக கூறி தங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்பொழுது தஞ்சமடைந்துள்ளனர்.

இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் தம்பதி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!