புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.. ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 பிப்ரவரி 2024, 7:09 மணி
Dharmapuri
Quick Share

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கூறி பஞ்சாயத்து தலைவர் தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி ஊராட்ச்சிக்குட்பட்ட வேடியூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதை எதிர்த்து ஒசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வேடியூர் கிராமத்தில் ஏற்கனவே ஒரு மதுபான கடை இயங்கி வருவதால் பொதுமக்களு க்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் என பலதரப்பட்ட மக்கள் இந்த மதுபான கடையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்அதே சமயத்தில் அதே பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு அரசு மதுபான கடை துவங்க மூலப்பொருட்கள் அந்த கிராமத்தில் வர துவங்கியுள்ளதால் பல முறை ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தில் இன்று புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊார்சிமன்ற தலைவர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து அவர்மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர்பல முறை ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தில் இன்று புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊார்சிமன்ற ஐலைவர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதனால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து அவர்மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் ஊற்றினர். பின்னர் ஊாராட்சி தலைவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 440

    0

    0