லாரியின் கதவில் சிக்கிய ஓட்டுநர்.. ஒரு வருடம் கூட ஆகலையே : சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2024, 10:44 am

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கத்தில் தனியார் கார்கோ நிறுவனம் உள்ளது.

இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து உதிரிபாகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேற பகுதிக்கு டெலிவரி எடுத்து செல்வது வழக்கம் அந்த வகையில் இரவு சென்னை எர்ணாவூரை சேர்ந்த எழில்ராஜ் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பொருட்களை இரக்க நிறுத்தத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் சரக்குகளை இறக்கி வைத்துள்ளார்.

பின்னர் மீண்டும் வாகனத்தை வெளியே எடுப்பதற்காக ஸ்டார்ட் செய்துவிட்டு அருகே உள்ள வாகனத்தில் இந்த வாகனம் இடித்துவிட போகிறது என்பதற்காக கீழே இறங்கி பார்த்துள்ளார்.

அப்போது திடீரென வாகனம் முன்னாள் சென்று அருகே இருந்த மற்றொரு வாகனத்தில் முட்டி நின்றது. இதில் எழில்ராஜ் தான் ஓட்டி வந்த சரக்கு லாரியின் கதவில் சிக்கிக்கொண்டது இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

எழில்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு எழில்ராஜ் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இந்த சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் எழில்ராஜிற்கு திருமணமாகி ஒராண்டு ஆன நிலையில் அவர் உயிர் இழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!