இந்தியாவிற்கே பெருமை சேர்த்த ஆவணப்படம்… அளவில்லா மகிழ்ச்சி : The Elephant Whisperers-ல் நடித்த யானை பாகன் உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
14 March 2023, 9:39 am
Quick Share

இந்தியாவிற்கே பெருமை சேர்த்த யானை குறும்படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக The Elephant Whisperers ஆவணக் குறும்படத்தில் யானை பாகன் பொம்மா உருக்கமாக பேசியுள்ளார்.

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகள் குறித்த இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கான்சால்வேஸ், தயாரிப்பாளர் குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது பெற்றது தொடர்பாக he Elephant Whisperers ஆவணக் குறும்படத்தில் யானை பாகன் பொம்மா உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது :- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தாயை இழந்த ஆண் குட்டி யானை ரகு பலத்த காயங்களுடன் இருந்தது. அதனை முதுமலை வன விலங்கு சரணாலயத்திற்க்கு எடுத்து வந்து வளர்த்து வந்தேன். அதன் பின்னர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டில் தாயை இழந்த பெண் குட்டியானை பொம்பி வந்தது.

இரண்டு குட்டிகளையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது என்பதால் உதவிக்கு அதே ஊரை சேர்ந்த பெல்லி என்ற பெண்ணின் உதவியுடன் இருவரும் சேர்த்து 2 குட்டி யானைகளையும் பராமரித்தோம். அப்போது, தாயை பிரிந்த குட்டி யானைகளை பற்றி தி எலிஃபான்ட் விஸ்பரஸ் என்ற ஆவணக் குறும்படம் எடுப்பதாக இயக்குநர் கார்த்திகா கோன்சாகி என்னிடம் தெரிவித்தார். மேலும், அதில் நாங்கள் இருவரும் கணவன் – மனைவி கதாபாத்திரங்களில் நடிக்க கேட்டுக் கொண்டார்.

நான் நீலகிரி மாவட்ட முதுமலை வன விலங்கு காப்பகத்தில் யானைகளை பராமரிக்கும் ஊழியராக உள்ளேன். நான் நடித்த இந்த படத்திற்க்கு ஆஸ்கர் விருது கிடைத்து மகிழ்ச்சியாக உள்ளது, என தெரிவித்தார்.

தாயை பிரிந்த யானை குட்டிகளை பராமரித்து வருவதும், தாயை இழந்த குட்டி யானையையுடன் எவ்வாறு பழகுவது, காட்டில் இருக்கும் போதும், தாயுடன் இருக்கும் போதும் யானையின் சுபாவம் எப்படி இருக்கும். அதேவேளையில் தாயையும், காட்டையும் பிரிந்து மனிதர்களிடையே எவ்வாறு பழகும் என்பதை இந்த ஆவணப் படம் வாயிலாக இயக்குநர் அழகாக படமாக்கி உள்ளார்.

Views: - 409

0

0