இறப்பு சான்றிதழ் கேட்ட இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த விவகாரம் : தலைமறைவான விஏஓவை தூக்கிய தனிப்படை!!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2023, 4:00 pm
இறப்பு சான்றிதழ் கேட்ட இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த விவகாரம் : தலைமறைவான விஏஓவை தூக்கிய தனிப்படை!!!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது நல்லாப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இருளர் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கீதா எனும் பெண்ணின் கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு சங்கீதா நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர் ராஜ் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது விஏஓ ஆரோக்கிய பாஸ்கர் ராஜ் சங்கீதாவிடம் அவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், சங்கீதா 3 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சங்கீதாவிடம் ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் விதவை பென்ஷன் வாங்கித் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி அடிக்கடி சங்கீதாவின் செல்போன் எண்னை வாங்கி இரவு நேரத்தில் அவரிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.
இது குறித்த ஆடியோ ஆதாரத்துடன் சங்கீதா கடந்த 23-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் ஆய்வாளர் மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் என தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில், பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர் ராஜ் மீது துரை ரீதியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கிராம நிர்வாக அலுவலரை தனிப்படை போலீசார் கெடார் அருகே உள்ள தொறவிபாளையம் கிராமத்தில் அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த வீஏஓ வை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0