தமிழகத்தை உலுக்கிய அடுத்த சம்பவம்… 12ஆம் வகுப்பு மாணவன் கொலை : விசாரணையில் பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 2:41 pm

தமிழகத்தை உலுக்கிய அடுத்த சம்பவம்… 12ஆம் வகுப்பு மாணவன் கொலை : விசாரணையில் பகீர் தகவல்!!

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் மாணவன் ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்ற போலீசார் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தலைமறைவாக உள்ள ஆனந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!