திடீரென சாலையின் குறுக்கே வந்த நபர் : நிலைதடுமாறிய பேருந்து : பதற வைக்கும் காட்சிகள்!

Author: kavin kumar
10 February 2022, 1:56 pm
Quick Share

வேலூர் : வேலூர் அருகே சாலையின் குறுக்கே வந்த நபர் மீது அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வேலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கேஜிஎப் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து எர்த்தாங்கல் என்னும் பகுதியில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே திடீரென பவன்குமார் என்பவர் வந்ததால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையின் ஓரம் பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள வயல்வெளியில் பேருந்து இறங்கியது. இதில் சாலையின் குறுக்கே வந்த பவன்குமார் காயம் அடைந்தார்.

அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் பேருந்தை போக்குவரத்து துறையினர் மீட்டனர். மேலும் விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 853

0

0