விடாமல் தொடரும் மழை.. மீண்டும் சிக்கும் அந்த 4 மாவட்டங்கள் : வெதர்மேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 4:28 pm

விடாமல் தொடரும் மழை.. மீண்டும் சிக்கும் அந்த 4 மாவட்டங்கள் : வெதர்மேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை தற்போது தென் தமிழகத்தின் பக்கம் பார்வையத் திருப்பியுள்ளது. நேற்று முதல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த கனமழைக்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று நேற்றும் இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மாபெரும் மழை பெய்து வருகிறது. மழை இங்கு இப்போதைக்கு நிற்காது. மதியம் 2.30 மணி வரை பெய்த மழையின் அளவை பாருங்கள்.. நாளை காலை இது 300+ மி.மீ ஆக இருக்கும். செவ்வாய்கிழமை தான் மழை குறையும். இப்போது பெய்து கொண்டிருப்பது ஆபத்தான மழை.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மாவட்டங்களில் 18 இடங்களில் மழைமானிகள் உள்ள நிலையில், பகுதி வாரியாக இன்று காலை முதல் பெய்த மழை அளவையும் பகிர்ந்துள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை, அதாவது 6 மணி நேர்த்தில், மூலைக்கரைபட்டி பகுதியில் அதிகபட்சமாக 200 மி.மீ மழை பெய்துள்ளது. ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு அணை ஆகிய பகுதிகளில் 185 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!