வடமாடு மஞ்சுவிரட்டு என்ற பெயரில் காளையை துன்புறுத்திய வீரர்கள்… கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்…

Author: kavin kumar
16 February 2022, 2:24 pm
Quick Share

தருமபுரி : தருமபுரி அருகே அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் வாலை பிடித்த துன்புறுத்திய சம்பவம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அடுத்த முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இந்த ஆண்டு முதல் தகடூர் வடமாடு மற்றும் ஜல்லிகட்டு பேரவை சார்பில் மஞ்சுவிரட்டு திருவிழா இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் பங்கு பெரும் மாடுபிடி வீரர்கள் மாடுகளை துன்புறுத்தக் கூடாது என்ற அரசாணை உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் அரசாணைக்கு எதிராக கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற போட்டியில் மாட்டின் வாலை சுமார் அரை மணி நேரம் பிடித்து இழுத்து துன்புறுத்தி விளையாடினர்.

விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி வழங்கி வரும் நிலையில், அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு மாடுகளை துன்புறுத்தி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காளைகளை துன்புறுத்தி போட்டி நடத்துபவர்கள் மற்றும் மாட்டின் வாலை பிடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அதுவும் கால் நடை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் வாலை பிடித்த துன்புறுத்திய சம்பவம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 522

0

0