விளையாட்டு போட்டிக்கு சென்ற மாணவிகள் சடலமாய் திரும்பிய சோகம் : உடலை வாங்க மறுத்து கதறிய உறவினர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 7:21 pm
Karur 4 Dead- Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் விளையாட்டு போட்டியை முடித்து விட்டு புதுக்கோட்டைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவனையை சுற்றிப்பார்க்க இறங்கியுள்ளனர். அப்போது அதில் சில மாணவிகள் ஆற்றில் இறங்கியுள்ளனர்.

அப்போது அதில் ஒரு மாணவி ஆற்றில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அதை பார்த்த மற்ற மாணவிகள் 3 பேர் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கி மாயமாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைபுத்துறையினர் விரைந்து வந்து மாணவிகளை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நீரில் மூழ்கிய 4 மாணவிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கால்பந்து போட்டிக்கு அழைத்துச் சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு குழந்தைகள் பலியானது அடுத்து தற்போது பெற்றோர்களின் மாணவர்கள் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் தற்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன.

போட்டிக்கு அழைத்துச் சென்ற 13 பேரில் நான்கு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருந்ததை அடுத்து மீதமுள்ள ஒன்பது குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை வீடியோ காலில் எங்களுக்கு உறுதிப்படுத்தவும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போட்டிக்கு மட்டுமே பெற்றோர்கள் அனுமதி கொடுத்தோம் ஆற்றில் குளிப்பதற்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை எனவும் உடற்பயிற்சி ஆசிரியரை தொடர்பு கொள்ளும்போது அவர் தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தலைமையாசிரியர் பொட்டுமணி, சேபாச கா யூ இப்ராஹிம், திலகவதி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுவதாக மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

Views: - 519

1

0