கடைசியாக பழனி முருகனை தரிசனம் செய்து கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு : தனியார் விடுதியில் குவிந்த உறவினர்கள்.. உருக வைத்த சோக சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 12:40 pm
Kerala Couples Suicide - Updatenews360
Quick Share

பழனியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவை சார்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை முன்தினம் கேரளாவை சார்ந்த சுகுமாரன்-சத்தியபாமா‌ எனும் தம்பதி இருவர் வருகை தந்தனர். அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை பதிவு செய்து தங்கினர்.

பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி தங்கிய நிலையில்,நேற்று நள்ளிரவு தனியார் விடுதிக்கு கேரளாவை சேர்ந்த சிலர் அழுதபடியே வந்தனர். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள கணவன்-மனைவியான சுகுமாறன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள்‌ என்றும், அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பி தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்சப் மூலம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த‌ விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையுடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.

மேலும் தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், தாங்கள் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக மலையாளத்தில் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன்‌ பிரச்சினையால் கேரள தம்பதி இருவரும் பழனியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 583

0

0