என்று மாறுமோ இந்த நிலை… சுடுகாட்டுக்கு பாதை இல்லை ; உடலை சேற்றில் சுமந்து செல்லும் அவலம்..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 9:54 pm
Quick Share

விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் சேற்றில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம் உள்ளதாக அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சின்னமணி என்பவர் உடல் நிலை குறைவால், நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடலை நல்அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் அக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சுடுக்காட்டுக்கு செல்லும் பாதை, தார் சாலை அமைக்கப்படாததால், தற்போது பெய்து வரும் கனமழையால், சாலை, முழுவதும் சேரும் சகதிமாக உள்ள நிலையில், இறந்து போன சின்னமனியின் உடலை, கடும் சிரமத்துடனும், தள்ளாடிக் கொண்டு தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறந்து போனவரை நிம்மதியாக கூட கொண்டு செல்ல முடியவில்லை என்றும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சீரமைத்து செய்து தரக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம், பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். உடனடியாக சுடுகாட்டு செல்லும் பாதையை சீரமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 116

0

0