இது இயற்கை அல்ல.. திமுக உருவாக்கிய செயற்கையான மின்வெட்டு : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 4:36 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அசாரதாமான சூழல் நிலவி வருகிறது.

சமூக நீதி காப்பதாக கூறும் ஸ்டாலின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் தீர்ப்பு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

அம்பா சமுத்திர கமிஷன் தகவல்கள் மூலம் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இன்றைய சூழலில் ஏற்புடையதாக இல்லை என கூறப்படுகிறது. முறையாக தகவல்கள் சமர்பிக்கவில்லை. மதுரை நீதிமன்றத்தில் தகவல்களை ஏன் முறையாக சமர்பிக்கவில்லை என கேள்வி எழுப்பினார், இந்த தீர்ப்பால் மிக பெரிய ஆபத்து தமிழகத்திற்கு ஏற்ப்பட்டுள்ளது.

2010 ல் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டது. விரைவில் 69% இட ஒதுக்கீடு குறித்து விசாரணை வரும். அம்பா சமுத்திரம் ஆணையத்திற்கு பிறகு நீதியரசர் குலசேகர் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி. 6 மாத காலம் ஆணையம் செயல்பட்டு இருந்தால் உச்சநீதிமன்றத்தில் வாதாட வாய்ப்பாக இருந்து இருக்கும். வாயால் பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் சமுக நீதி கிடைத்து விடாது,

குலசேகர ஆணையத்தை ஏன் முடக்கினீர்கள் ஏன் செயல்படுத்தவில்லை, திமுகவை கேள்வி கேட்க முழு தகுதி அதிமுக விற்கு தான் உள்ளது. துரைமுருகன், சிவசங்கரம், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை,

சாதிவாரி கணக்கெடுப்பு மிக மிக அவசியம். அவற்றை ஏன் இந்த அரசு எடுக்க தயங்குகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
22 % கிடைக்கும். அதை ஏன் திருமாவளவன் கேட்க வில்லை. குலசேகர ஆணையம் செயல்பட வேண்டும், சமூக நீதி கூட்டமைப்பை உலகம் முழுவதும் பரப்பி வரும் ஸ்டாலின் மத்திய அரசு மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல மாநிலங்களில் மக்கள் கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் முதல்வர் ஏன் கோரிக்கை வைக்கவில்லை. நீட்டை எதிர்க்கும், இதில் மட்டும் மத்திய அரடோடு ஸ்டாலின் கைகோர்ப்பது ஏன் , மக்களுக்கு கிடைக்கிற இட ஒதுக்கீட்டிற்கு திமுக அரசு முட்டு கட்டை போடுகிறது..

இந்தியாவிலேயெ மிகவும் பிறப்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள்
74% சதவீத,18% ஆதிதிராவிடர், 94 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா
69% ஆக வழங்கி கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி அமைத்த ஆணையத்தை செயல்படுத்தாமல் யாரை காப்பாற்ற 94% மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறது.

ஆட்சி மாற்றத்திற்கு வந்த 2வது மாதத்திலேயே மின் வெட்டு பற்றாக்குறை வந்தது. தமிழகத்தில் திமுக அரசால் செயற்கையாக மின் வெட்டு ஏற்ப்படுத்தப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் நடைப்பெற்ற ஊழலை போல தற்போதும் நடத்த தனியாரிடத்தில் அதிக விலையில் மின்சாரம், தரமற்ற முறையில் நிலக்கரி வாங்கி ஊழல் செய்ய தான் திமுக முயற்சிக்கிறது,.

இனியும் தூங்குவதையும் நடிப்பதையும் விட்டுவிட்டு ஸ்டாலின் குலசேகரன் ஆணைத்தை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கண்க்கெடுப்பை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Views: - 573

0

0