கோபத்தின் உச்சம் : வெளிவந்த சாணி காயிதம் பட டீசர்.. புதிய அவதாராம் எடுத்த கீர்த்தி சுரேஷ், செல்வராகவன்..!

Author: Rajesh
22 April 2022, 4:39 pm
Quick Share

செல்வராகவன் இயக்கத்தில் உருவான, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் இன்று வரை ரசிகர்கள் போற்றும் திரைப்படங்களாக உள்ளன. இந்த நிலையில் தான், இயக்கத்தில் மட்டும், கவனம் செலுத்தி வந்த செல்வராகவன், நடிப்பிலும் களம் இறங்கியுள்ளார். இந்த படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், குறைந்த கால கட்டத்திலேயே கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மக்களிடையே நல்ல வரேவேற்பை பெற்று தந்த, ‘ராக்கி’ பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும்.இந்த திரைப்படம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் வழிப்பறிக் கொள்ளை சம்பந்தப்பட்ட பல காட்சிகள் மற்றும் திரைக்கதைகள் பதிவாகி இருக்கிறது.

கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Views: - 715

7

0