அடுத்தடுத்து இந்தியாவுக்கு தஞ்சம் தேடி வரும் இலங்கை மக்கள்… மேலும் 13 பேரை பிடித்து கடற்படையினர் விசாரணை…

Author: Babu Lakshmanan
22 April 2022, 4:26 pm

இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த 13 பேரை இந்திய கடற்படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அரிசி, எண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. இதனால், அங்கு வாழ முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றாவது, பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்ற முடிவும் இலங்கை மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்திலிருந்து கைக்குழந்தைகள், பெண்குழந்தைகள், பெண்கள் உட்பட 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொட்டும் மழையில் உயிரை பணயம் வைத்து பைபர் படகில் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

நள்ளிரவில் தனுஷ்கோடி மணல் திட்டில் வந்து இறங்கினர். இவர்களை கடற்படை போலீசார் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?