தமிழகம், ஆந்திராவை குறிவைத்து நகரும் புயல் ; தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Author: Babu Lakshmanan
1 December 2023, 11:49 am
Quick Share

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருவதால், தமிழகத்தில் கன மழை மற்றும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய புயல் சின்னம் உருவாகும் நிலையில், தமிழகத்திற்கு டிசம்பர் 5ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், டிசம்பர் 4ம் தேதி ஆந்திராவிற்கு அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகி உள்ளது என்பதை விளக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Views: - 273

0

0