புகார் சொல்லி சொல்லி சலிச்சே போச்சு… தலைவிரித்தாடும் கள்ளச்சாராயம் : களையெடுக்க களமிறங்கிய பெண்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 4:14 pm

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தான்இருப்பு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு சாராய விற்பனை படு ஜோராக விற்பனை நடைப்பெற்று வருகிறது.

மக்கள் வசிக்கும் இடம், வயல் வெளிகளில் வைத்து வியாபாரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஆட்கள் வந்து செல்வதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே அப்பகுதியில் இருந்து வந்துள்ளனர்.

மேலும் அப்பகுதி ஆண்கள் காலை எழுந்த உடனே சாராயத்தை குடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமலே வயல் வெளிகளில் விழுந்து கிடந்தள்ளனர்.

இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு செங்கல் சூலை பகுதியில் சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டி அவர்களிடமிருந்து கைப்பற்றிய சாராய மூட்டைகளை சாலைகளில் போட்டு உடைத்தனர்.

மேலும் சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.சாராயம் வியாபாரிகள் குறித்து பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பெண்களே சாராய வியாபாரிகளை அடித்து விரட்டி சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!