ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்… வாழைத் தோட்டத்தில் நுழைந்து அட்டகாசம் : பொதுமக்கள் அச்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 2:36 pm
Elephant - Updatenews360
Quick Share

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்… வாழைத் தோட்டத்தில் நுழைந்து அட்டகாசம் : பொதுமக்கள் அச்சம்!!

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

\

அவ்வாறு ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சென்று விடுகிறது. இந்நிலையில் இரவு தடாகம் சாலை காளையனூரில் இரண்டு காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து உலா சென்றுள்ளது.

பின்னர் அங்குள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள், வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 220

0

0