கார் – வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 3 இளைஞர்கள் பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த சோகம்!

Author: Babu Lakshmanan
14 April 2023, 11:56 am

திருவள்ளூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து கார் மூலம் சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு சென்றபோது பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் எதிரே வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த அஸ்வின், பாலாஜி, மதன் ஆகிய 3 இளைஞர்கள் பலியாயினர். பலத்த காயங்களோடு விஷ்னு, ஹேமந்த் ஆகிய 2 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தொழிற்சாலை வேனில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் 11 பேர் லேசான காயங்களோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் அரக்கோணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்தது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!