ஹனுமன், பரமசிவன் வேடமணிந்து நூதனம்…. ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கையை வழங்கிய பாஜகவினர்…!!

Author: Babu Lakshmanan
16 January 2024, 7:50 pm

ஹனுமன், பரமசிவன், பார்வதி வேடமணிந்து அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கையை பாஜகவினர் வழங்கினர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

அதனையொட்டி, திருவாரூர் மாவட்டம் தண்டலை விளமல் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பரிவார் அமைப்புகள் சார்பில் அழைப்பிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் தலைமையில் வீடு வீடாக சென்று அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதை வீட்டு வாசலில் ஏற்றும் அகல் விளக்குடன் வெற்றிலை பாக்கு புஷ்பங்கள் வைத்து அனைவரையும் அன்று மதியம் நடைபெறும் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பில் பார்க்குமாறு எடுத்து கூறினர்.

அதேபோல், முதல் நாள் அருகே உள்ள கோவில்களில் அர்ச்சனை செய்தும், கும்பாபிஷேகத்தன்று மாலை 6.00 மணிக்கு அனைத்து வீட்டின் வாசல்களிலும் ஐந்து அகல் விளக்குகள் மற்றும் திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ரவி, எட்டியலூர் சிவா, ஓபிசி அணி மாவட்ட செயலாளர் வினோத்குமார், ஜெகதீசன் முரளி, விவேகானந்தன், கழுகுசங்கர், மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பத்திரிக்கை வழங்கினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!