லீக்கான குரூப் 2 வினாத்தாள்… அரசுத் தேர்வில் முறைகேடு..? தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 4:12 pm
Quick Share

திருச்சி ; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் போட்டி தேர்வுகளுக்கான NR, IAS பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25ஆம் தேதி நடத்திய தேர்வினை எழுதிய மாணவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்தனர்.

அப்போது, அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25ஆம் தேதி நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் அத்தேர்வு எழுதினார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

பாரபட்சமாக நடத்தப்பட்ட அந்த தேர்வில் வழங்கப்பட்ட சிலரது விடைத்தாள் தொகுப்பில் ஏற்கனவே விடைகள் எழுதப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு நடத்தப்படவில்லை. மதியம் வழங்க வேண்டிய வினாத்தாள் சிலருக்கு காலையிலேயே வழங்கப்பட்டு அது திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால் மதிய தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது.

இதனால் சில மாணவர்கள் காலை தேர்வு முடிந்தவுடன் இடைவெளி நேரத்தில் மதிய தேர்வு விடைகளை படித்து விட்டு தேர்வு எழுதி உள்ளனர். சமத்துவமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும், வருடா வருடம் தேர்வு நடத்தி உடனுக்குடன் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். குரூப் 2 ஏ தேர்விற்கான முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை தனித் தனியே நடத்த வேண்டும், என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய NR IAS அகாடமி இயக்குனர் விஜியாலயன் கூறியதாவது ;- விஏஓ தேர்வுகளை அரசு நடத்தி வந்த போது மாணவர்களுக்கு கூடுதலான ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது சமீபத்தில் குரூப்4ல் விஏஓ தேர்வை இணைத்தது மாணவர்களுக்கு ஒரு இழப்பு. அதேபோல் குரூப்2 ஏ தேர்வுகளை குரூப்2 நேர்முக தேர்வுகளோடு இணைத்தது மற்றொரு இழப்பு. ஆகவே, குரூப் 2 தேர்வில் இருந்து குரூப் 2 ஏ பணிகளை பழையபடி பிரித்திவிட்டாலும், குரூப்4 விஏஓ பணியில் இருந்து பிரித்துவிட்டால் இன்று இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளும், வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது, என தெரிவித்தார்.

Views: - 426

0

0