ஆம்ஸ்டிராங் கொலையில் ட்விஸ்ட் : போலீஸ் வருவது சீசிங் ராஜாவுக்கு எப்படி தெரிந்தது? சிக்கும் கருப்பு ஆடு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 2:00 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது ஆந்திராவில் அவரது இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படை போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து அங்கிருந்து சீசிங் ராஜா காரில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

காரின் பதிவெண்ணை வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் மும்முரமாக தேடிவருகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்பிரிவில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் சீசிங் ராஜாவுக்கு நண்பராக உள்ளதாகவும் அவர் தான் தனிப்படை போலீசார் அவரை தேடி வரும் தகவலை முன்கூட்டியே கசியவிட்டதாக கூறப்படுறது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசு.. மாநிலம் முழுவதும் போராட்டம் : திமுக அறிவிப்பு!

இதனையடுத்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியின் செல்போன் தொடர்பு விவரங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!