கோவையில் வேட்டை கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது: லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்..!!

Author: Rajesh
1 March 2022, 11:37 am

கோவை: கோவை அருகே மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற இருவரை, வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டையில், வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிறுமுகையை நோக்கி வந்த காரை நிறுத்த முயன்றபோது, நிற்காமல் வேகமாக சென்றது.

விரட்டி சென்ற போலீசார் கோவில்மேடு பகுதியில், காரை வழிமறித்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்து மூவர் தப்பி ஓடினர். இதனிடையே காருக்குள் இருந்த இருவரை வனத்துறையினர் பிடித்தனர். இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது, காரில் இருந்தவரிடம் விசாரித்த போது, மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வந்ததாக கூறினர்.

காரை சோதனை செய்தபோது, லைசென்ஸ் இல்லாத இரண்டு ஒற்றை குழல் துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சேலம் ஓமலுாரை சேர்ந்த லட்சுமணன்(33), சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த மணி (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மூவரை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?