உதயநிதி செய்வது குழந்தைத்தனமாக அரசியல்.. அடுத்தது திமுக எம்பி சிக்கப் போறாரு : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 5:43 pm

உதயநிதி செய்வது குழந்தைத்தனமாக அரசியல்.. அடுத்தது திமுக எம்பி சிக்கப் போறாரு : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள உத்தண்டியூர் பகுதியில் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மீன்வளம் பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் எம் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தபால் துறை, மருத்துவத் துறை மகளிர் சுய உதவி குழுவினர் வேளாண் ஆராய்ச்சி மையம், இந்தியன் ஆயில் நிறுவனம், முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கம் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன அதனை அமைச்சர் பார்வையிட்டார்.

அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி டிஜிட்டல் முறையில் தனது தொலைபேசி மூலம் பணம் செலுத்தினர். தொடர்ந்து மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டார்.

பின்னர் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தபால் துறையின் செல்வ மகள் திட்ட பயனாளிகளுக்கும், உஜ்வாலா கேஸ் திட்ட பயனாளிகளுக்கும், விவசாயிகளுக்கும், சுய உதவி குழுவினருக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் கீழ் 35 பயனாளிகளுக்கு 1.93 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன்

2047 ல் நமது நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது நமது பிரதமர் மோடியின் கனவு. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பயனாளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

காசநோய் இல்லாத நிலை உருவாக்குவதற்காக இந்த நிகழ்ச்சியில் பரிசோதனை செய்யப்படுகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுவதோடு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு, இலவசமாக கழிப்பறை கட்டித் தரப்படுகிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 2047 ல் 100 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும்போது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நமது பிரதமர் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.

பின்னர் மெட்ராஸ் உர நிறுவனம் சார்பில் நானே யூரியா உரம் ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல்முறை விளக்கம் அமைச்சர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மழை வெள்ளத்தைப் பொறுத்த வரையில் திமுக தலைமையின் தமிழக அரசு சரியான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

முன்னெச்சரிக்கை கொடுத்தும் கூட மழை வெள்ளத்தை கையாள அவர்களிடம் திட்டம் இல்லாமல் இருந்தது. 4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் செய்ததாக கூறினார்கள். ஆனால் அந்த 4000 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை.

திராவிடம் மாடல் என்கிறார்கள். இது போலி திராவிட மாடல். மழை நீரை கடலுக்கு கூட கொண்டு சேர்க்க முடியவில்லை. 900 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை கண்டறிவதற்காக மத்திய குழு வந்துள்ளது.

குழு நிவாரணம் குறித்து அறிக்கை சமர்ப்பித்த பின் மேலும் நிவாரணத்திற்கு நிதி கொடுப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். உதயநிதி ஸ்டாலின் குழந்தைத்தனமாக அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார்.

அவர் தன்னை பண்பட்டவராக வளர்த்துக் கொள்ள வேண்டும். தென்மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நியாயமான நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

இன்றைக்கு ஊழல் அமைச்சர்களை பார்க்கிறோம். ஒரு அமைச்சர் ஜெயிலில் உள்ளார். இன்னொரு அமைச்சருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

ஒரு எம்பி வீட்டில் 1200 கோடி ரூபாய்க்கான வரியை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு அமைச்சர் வீட்டில் 500 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் யார் பணம் மக்கள் பணம். திராவிட முன்னேற்ற கழகம் என்றாலே ஊழல் என்று அர்த்தம்.

ஊழலையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரிக்க முடியாது. எங்களுடைய கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். டிராயை பொறுத்தவரை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு குறித்து பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளனர். யாரையும் பாதிக்காத வகையில் இது சம்பந்தமாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 490

    0

    0