பெண்ணை விரட்டி விரட்டி தாக்கும் VAO உதவியாளர்… அரசு ஊழியர் மீது நடவடிக்கை பாயுமா? ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 6:17 pm
Vao Assistant
Quick Share

பெண்ணை விரட்டி விரட்டி தாக்கும் VAO உதவியாளர்… அரசு ஊழியர் மீது நடவடிக்கை பாயுமா? ஷாக் சிசிடிவி காட்சி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் சண்முகவேல்.

இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று கிராம உதவியாளராக பணியமர்ந்து ஓராண்டு காலமே ஆகியுள்ள நிலையில். இவர் மீது மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஆகியோரிடம் பல புகார்கள் வழங்கப்பட்ட நிலையில் இவர் தாலுகா அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் ஒரு பெண்ணை விரட்டித் தாக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும் இவரது செல்போன் ஸ்டேட்டஸில் கத்தியுடன் இவர் நிற்கும் புகைப்படத்தினை பதிவேற்றியதை whatsapp மூலமும் பரப்பி வருகின்றனர்.

இது கோவில்பட்டி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இவர் whatsapp ஆடியோவில் தரக்குறைவான முறையில் பேசியதும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஒரு அரசு ஊழியராக பணியாற்றி கொண்டு ஆட்களை மிரட்டும் வகையில் சூரிக் கத்தியுடன் போஸ் கொடுப்பதும் பெண்கள் என பாராமல் நடுரோட்டில் அடிக்க பாய்வதும் உடன் பணியாற்றுபவர்களை மிரட்டுவது போல் இழிவான வார்த்தையில் வசைபாடுவது என இவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் இவர் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Duraimurugan 200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!
  • Views: - 226

    0

    0