திமுக எம்பி ஆ.ராசாவுக்கு நீடிக்கும் கடும் எதிர்ப்பு… வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 4:37 pm

திருவாரூரில் திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரை இழிவாக பேசிய திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது பேச்சுக்கு அவர் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பிள்ளைமார் சமுதாயத்தினர், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக எம்பி ஆண்டிமுத்து ராசா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆண்டிமுத்து ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனிடையே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?