விஜய்யை அரசியலுக்கு வர சொன்னது யார் தெரியுமா? வெளியான உண்மை : அதிர்ந்து போன ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 4:22 pm

விஜய்யை அரசியலுக்கு வர சொன்னது யார் தெரியுமா? வெளியான உண்மை : அதிர்ந்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யதின் 7ஆம் ஆண்டு துவக்க விழா சென்னை ஆழ்வார்பேடையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், விஜய் கட்சி துவங்கியது குறித்து கேள்ளி கேட்டபோது, விஜய்யை அரசியலுக்கு வருமாறு முதல்முறையாக அழைத்தது நான்தான் என்றார்.

அவர் சினிமாவையே ஒதுக்கிவிட்டு வந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் ஈடுபடுவது விஜய்யின் பாணி. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும் என பதில் அளித்திருந்தார். விஜய்யை அரசியலுக்கு அழைத்ததே நான்தான் என கமல் கூறியதால் இரு தரப்பினரின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Nayanthara Talk Indirectly about Prabhu Deva இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!
  • Views: - 415

    0

    0