தர்காவிற்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜகவினர் கைது : காவல்நிலையம் முன் நிர்வாகிகள் கூடியதால் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 9:43 pm
BJp Arrest - Updatenews360
Quick Share

மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு காவல்துறை அனுமதியின்றி செல்ல முயன்றதாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டததால் பரபரப்பு ஏற்பட்டது,

மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் சித்திக், மற்றும் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில தலைவர் டெய்சி ஆகியோர் புதூர் பகுதியில் இருந்து செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது காவல்துறையினர் அனுமதியின்றி செல்ல முயன்றதாக கூறி பாஜக நிர்வாகிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை மீறியும் செல்ல முயன்றதால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளை புதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உஉள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் காவல்நிலையம் முன்பாக திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு காவல்துறையினர் குவித்துவைக்கப்பட்டிருந்தனர்.

இதை தொடர்ந்து 3மணி நேரத்திற்கு பின்பாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு முன்பாக திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலையசெய்தனர்.

காவல்துறையினரை மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இது ஜனநாயக படுகொலை வழிபாட்டிற்கு தடை விதித்து கைது செய்யும் நடவடிக்கைக்கு ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும், விரைவில் ஒரு நாள் அனைவரையும் திரட்டி கோரிப்பாளையம் தர்ஹாவிற்கு செல்வோம் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் மற்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

Views: - 472

1

0