சொல்ல சொல்ல கேட்காத மன்சூர் அலிகான்… மருத்துவர்களின் முடிவை மீறி டிஸ்சார்ஜ்… காரணம் என்ன..?

Author: Babu Lakshmanan
18 April 2024, 9:12 pm

மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, மருத்துவமனையில் இருந்து அடம்பிடித்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

நாளை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார். தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர். கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.

மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: தேர்தல் கருத்து கணிப்புகள் தடை செய்யப்படுமா…? கொந்தளிக்கும் வாக்காளர்கள்!

இந்த நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, மருத்துவமனையில் இருந்து அடம்பிடித்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!