சீருடையுடன் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை : விபரீத முடிவுக்கு காதல் காரணமா..? என்று போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
4 February 2022, 11:00 am
Quick Share

வேலூர் : வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பள்ளி மாணவன் சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்த பாலாஜி (17) என்ற மாணவன், தட்டப்பாறை பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிக்குச் சென்ற மாணவன் பாலாஜி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த நிலையில், இன்று காத்தாடிகுப்பம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய படி சடலமாக மாணவன் பாலாஜியின் உடல் மீட்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் தற்கொலை முடிவுக்கு காதல் விவகாரம் காரணமா..? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா..? என்று பல்வேறு கோணத்தில் குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 895

0

0