ஒரே குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் சீட்…அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிருப்தி: அதிமுகவிற்கு தாவிய கோவை திமுகவினர்…!!

Author: Rajesh
4 February 2022, 10:44 am
Quick Share

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்து திமுக தொண்டர்கள் பலர் அதிமுகவில் இணைந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வெள்ளிகிழமையுடன் நிறைவடைகின்றது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு மகளிர் அணியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வில்லை எனவும், திமுக நிர்வாகிகளின் மனைவி மற்றும் மகள்களுக்கு சீட்டை ஒதுக்கி இருப்பதாக கூறி திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் , மகளிர் அணி நிர்வாகி கல்பனா தலைமையில் கோவை பீளமேடு அருகில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டனர்.

மேலும், திமுக பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 46 வது வார்டு திமுக வேட்பாளராகிய மீனா லோகநாதன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அவரும் அவர் குடும்பத்தினரும் திமுக வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதனை, கண்டித்து திமுகவை சேர்ந்த பலர் அதிமுக வேட்பாளர் தளபதி செந்தில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Views: - 422

0

0