டெண்டர் விடாமல் பணிகள் செய்தால் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 9:57 am
Corporation
Quick Share

டெண்டர் விடாமல் பணிகள் செய்தால் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் : CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை!

டெண்டர் விடாமல் செய்யப்பட்டு வரும் பணிகளால் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என KCP Infra Limited நிறுவனரும், CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் K.Chandraprakash எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்டை தன்மை கிடையாது. மாநகராட்சி அலுவலர்கள் சிலர் தங்கள் வீடுகளில் டெண்டர் கோப்புகளை மறைத்து யாரும் பார்க்காதபடி தடுக்கின்றனர்.

டெண்டர் திட்ட மதிப்பீடு, அளவீடு உள்ளிட்ட விபரங்களை ஒப்பந்ததாரர்கள் பார்க்கவிடுவதில்லை. டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிப்படி முறையாக டெண்டர் விட்டு தான் பணிகளையே நடத்த வேண்டும்.

ஆனால் அட்வான்ஸ் ஒர்க் என்ற பெயரில் முன்கூட்டியே பணிகளை செய்து முடிக்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் அவசரப்பட்டு இந்த பெயரில் எந்த வேலைகளையும் செய்யக்கூடாது.

டெண்டர் விடாது பணிகளை மேற்கொள்ள தனிப்பிரிவு சட்ட விதிமுறை உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கோவை 100 அடி ரோட்டில் டெண்டர் விடாமல் சாலை பணிகள் செய்யப்பட்டது.

அது பெரிய பிரச்சனையாகி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அதே போல் அதிகளவு டெண்டர் விடாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் திட்டப்பணிகள் செய்பவர்கள் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகளும் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 96

0

0