தனி ஒருவன் நினைத்துவிட்டால்…. விஜய்யின் கல்வி விருது விழாவுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவா?

Author: Shree
17 ஜூன் 2023, 11:59 காலை
vijay award function
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தீவிரமாக அரசியலில் இறங்க அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார். விரைவில் அவர் அரசியலில் அடித்தளமிடவிருக்கிறார். இதற்காக சமூக நலன் சார்ந்த விஷயங்களை தன மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார்.

அந்தவகையில் அண்மையில் +2 , 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டார்.

இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார். .இந்நிலையில் 17ம் தேதி இன்று மாணவர்களை விஜய் சந்தித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் விழாவில் கலந்துக்கொள்வதற்காக விஜய் வீட்டில் இருந்து காரில் கிளம்பும்போது வழியெங்கும் ரசிகர்கள் சூழ்ந்து அவரை ஆரவாரம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட சில புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சற்றுமும் கிடைத்துள்ள தகவலின்படி, இந்த கல்வி விருது விழாவிற்காக ரூ. 2 கோடி இரண்டு செலவு செய்யப்பட்டிருப்பதாக விஜய் மக்கள் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, விருந்து செலவு , விழா நடைபெறும் இடத்தின் வாடகை, மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை உள்ளிட்டவை அடங்குமாம். தனி ஒரு ஆளாக இவ்வளவு பிரமாண்டமான விழா நடத்துவது சாதாரண விஷயமே இல்லை. இதன் மூலம் விஜய் அரசியல் வாதிகளையே சற்று உரசி பார்த்துட்டார் என்கிறது அரசியல் வட்டாரம்.

  • DMK joins TVK தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!
  • Views: - 389

    0

    0