அனைவரையும் சமமாக மதிக்கும் அரசு வேண்டும்…. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் : அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 5:34 pm
Annamalai - Updatenews360
Quick Share

அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, அண்ணல் அம்பேத்கர் இருந்ததால்தான் அரசியல் அமைப்பு சட்டப்படி இந்தியா நடந்து கொண்டிருக்கிறது.
அம்பேத்கர் 1951-ல் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.

அம்பேத்கர் எழுதிய ராஜினாமா கடிதத்தை அனைவரும் படிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு 1942-46வரை ஆங்கிலேயே அரசு, அம்பேத்கருக்கு வைஸ்ராய் கவுன்சிலில் சட்டம், இந்தியாவின் நீர்மேலாண்மை ஆகிய இரண்டு பெரிய பொறுப்பை தந்தனர்.

சுதந்திர இந்தியாவில் நீர்மேலாண்மையை நமக்கு அச்சாரமாக போட்டு கொடுத்தவர் அம்பேத்கர். அம்பேத்கர் மகாராஷ்டிராவில் பிறந்து தனது தனித்தன்மையால் சட்டமேதை ஆனார். சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றியக்கூடிய கமிட்டியின் தலைவராக வரவேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாரதிய ஜனதா கட்சிக்கு முன்னாள் இருந்த ஜனசங்கத்தின் தலைவர் ஷாம்பிரசாத் முகர்ஜி.

தமிழகத்தின் முதல்வர் பட்டியல் இன சமூதாயத்தினருக்கு கடைசியாக உள்ள மூன்று அமைச்சர் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். இதுதான் சமூக நீதியா? இதைதான் காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு செய்தார்கள்.

அம்பேத்கரை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர் ஜவஹர்லால் நேரு அப்போது அம்பேத்கர் தோற்கடிக்கபட்டார். அவர் பாராளுமன்றம் செல்லவேண்டும் என குரல் கொடுத்து ஜெயிக்க வைத்தவர் ஜனசங்கத்தின் தலைவர் ஷாம்பிரசாத் முகர்ஜி அவர்கள்.

உண்மையான சமூக நீதி என்பது, பிஜேபி ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வகிப்பவர் பட்டியல் இன சமூதாயத்தை சார்ந்தவர்.
குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியபோது முதல் முதலாக மோடி தேர்ந்தெடுத்தது பட்டியல் இன சமூதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை.
இந்தியாவின் தலைவர்களாக, முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி.

பட்டியல் இன மக்களுக்கு பாஜக என்ன செய்திருக்கிறது என பேசுவதற்கு திருமாவளவனை அழைத்தோம் வரவில்லை. அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், சுதந்திரம் கிடைத்து 40 ஆண்டு காலம் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா வழங்கப்படவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசினார்.

Views: - 515

0

0