மன்சூர் அலிகானுக்கு என்ன ஆச்சு? ICU பிரிவில் அனுமதி.. வேலூரில் இருந்து சென்னை மாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 9:48 pm
Mansoor
Quick Share

மன்சூர் அலிகானுக்கு என்ன ஆச்சு? ICU பிரிவில் அனுமதி.. வேலூரில் இருந்து சென்னை மாற்றம்!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: EPS பக்கம் சாய்ந்த சசிகலா?… அரசியல் களத்தில் திடீர் ட்விஸ்ட்!

தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னையில் கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனமதிக்கப்பட்டுள்ளார்.

Views: - 416

0

0