பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி RAID : போட்டுக் கொடுத்த திமுக? தேர்தல் பறக்கும் படைக்கு காத்திருந்த TWIST!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 10:04 pm
KRV
Quick Share

பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி RAID : போட்டுக் கொடுத்த திமுக? தேர்தல் பறக்கும் படைக்கு காத்திருந்த TWIST!!

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் பாஜக நிர்வாகி ஓ பி சி அணி மாநில செயலாளர் கே ஆர் வெங்கடேஷ் வீட்டில் மாதவரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே அவர் மீது ஆளும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு அடிக்கடி அவரது வீட்டில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி செல்வம் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என புகார் தெரிவித்ததை அடுத்து அவரது வீட்டில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: மன்சூர் அலிகானுக்கு என்ன ஆச்சு? ICU பிரிவில் அனுமதி.. வேலூரில் இருந்து சென்னை மாற்றம்!!

அங்கு எதுவும் கிடைக்கப்பெறாததால் ஏமாற்றத்துடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்றனர். கே ஆர் வெங்கடேசன் உறவினர் பாடியநல்லூர் பார்த்திபன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக போலீஸ் பாதுகாப்பு வேண்டுமென உயர் நீதிமன்றம் மூலம் அணுகிய நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டி அவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில் தற்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது வீட்டில் பரிசு பொருட்கள் பணம் பதுக்கி இருக்கலாம் என்கிற அடிப்படையில் சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொழிலதிபரான கே ஆர் வெங்கடேசன் கல்வி அறக்கட்டளைகளை நடத்தி வருவதுடன் தொடர்ந்து பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வருவதால் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக இது போன்று வேண்டுமென்று பொய்யான புகார்களை ஆளும் கட்சியினர் தெரிவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 125

0

0