நாங்க எப்ப அப்படி சொன்னோம்… ரூ.2000 நோட்டுகள் குறித்த வதந்தி : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 1:40 pm
Senthil Balaji - Updatenews360
Quick Share

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது.

4 மாதங்களில் வங்கிகளில் கொடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க உடனடியாக தடை விதித்து ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்க எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கக்கூடாது என்று எவ்வித சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 298

0

0