பர்தா அணிந்து நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றவர் யார்? போராட்டத்தில் குதித்த இந்து முன்னணியினரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 8:12 pm
Hindu munani Protest - Updatenews360
Quick Share

நெல்லையப்பர் கோவிலில் உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா அன்று பர்தா அணிந்த பெண் ஒருவர் சன்னதி வரை சென்றதாகவும், புகைப்படம் எடுத்தாகவும் சர்ச்சை எழுந்தது.

பர்தா அணிந்த பெண் யார் எதற்காக கோவில் உள்ளே வந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நெல்லைப்பர் கோவிலுக்கு முன்பாக திரண்ட இந்து முன்னணி அமைப்பினர், இந்து சமய அறநிலையதுறையையும், தமிழக அரசையும் கண்டித்து கண்களில் கருப்பு துணியை கட்டி திடிர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டத்தையடுத்து காவல்துறை இந்து முன்னணியை சேர்ந்த 20 பேரை கைது செய்தனர்.

Views: - 116

0

0