தரமற்ற சாலை குறித்து புகார் கொடுத்தவரை தாக்கிய திமுக கவுன்சிலர்… கூட்டத்தில் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 10:11 am
Quick Share

கோவை : கோவையில் தரமற்ற சாலை அமைத்ததாக புகார் கூறியவர்களை திமுக கவுன்சிலர் உள்பட கட்சியினர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சியின் 9வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6,31,000 ரூபாய் மதிப்பில் கான்கரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தரமில்லை என்று அமைக்கும் போதே அந்த பகுதி மக்கள் ஆட்சேபனை செய்தும், அதனை மீறி அந்த சாலையினை அமைத்தனர்.

பின் அந்த பகுதி பெண் ஒருவர் அந்த சாலையின் தரத்தில் சந்தேகம் உள்ளது என்றும், அந்த சாலை 1 வருடம் கூட தாங்காது எனவும், எனவே அந்த சாலையின் தரத்தை ஆய்வு செய்தபின் அந்த ஒப்பந்ததாரர்க்கு பணத்தை கொடுக்க வேண்டும் எனவும், மக்கள் பணம் வீணாக கூடாது எனவும் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அந்த 9வது வார்டு லட்சுமி கார்டன் பகுதி திமுக கவுன்சிலர் மோகன் மற்றும் சில திமுக நிர்வாகிகள் அந்த புகார் கொடுத்த பெண் வீட்டிற்கு சென்று தகாதவாறு பேசி சண்டையிட்டுள்ளனர். இதனை பார்த்து தடுக்க வந்த நபரை திமுக கவுன்சிலர் தாக்கியுள்ளார்.

அந்த திமுக பெண் நிர்வாகி தனது செருப்பால் அந்த நபரை தாக்கியுள்ளார். அந்த பகுதி மக்கள் அவர்களை தடுத்து தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளனர். அந்த நபரை தாக்கிவிட்டு திமுகவினர் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு, பொய் வழக்கு கொடுத்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Views: - 365

0

0