ஏன் நாங்க உள்ள வரக்கூடாது? கோவிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு.. சாலை மறியல்.. கோட்டாச்சியர் அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 7:14 pm

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் .

இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை காவடி எடுத்தல் என திருவிழா நடைபெற இருந்தது. நாளை நிறத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது இந்த நிலையில் இன்று காலையில் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது

இந்த நிகழ்ச்சிகளில் தங்களுடைய பட்டியல் இன சமூகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்களுக்கு அந்த கோவிலில் சம உரிமை வேண்டும் என்று கூறி திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு பகுதியில் பட்டியல் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணர் திருவாரூர் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் இரு தரப்பு மக்களிடம் பேசினார்கள்

பேச்சுவார்த்தையின் பொழுது பட்டியலின மக்கள் எங்களுக்கு அந்த கோவிலில் சம உரிமை வேண்டும் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதற்கு மேல் வகுப்பு மக்கள் நாங்கள் இந்த குத்து விளக்கு பூஜையை நிகழ்ச்சியையும்,காவடி எடுக்கும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் பட்டியலின மக்கள் இது குறித்து எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திடீரென வந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என தெரிவித்தார்கள்.

இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட பிறகு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் கோவிலில் பூட்டினர் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு கோவில் திறக்கப்படும் என தெரிவித்து சென்றார்கள்.

  • good bad ugly movie closes the box office in tamilnadu இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?