ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது.. அண்ணாமலை பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 8:23 pm
Tamilisai - Updatenews360
Quick Share

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமாரின் மரணம் எனக்கு வருத்தத்தை தருவதாகவும் அவர் அந்த முடிவு எடுத்திருக்க கூடாது.

அவருக்கு எதன் அடிப்படையில் மன அழுத்தம் வந்ததை நாம் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த அவர், காவலருக்கு ஒரு சங்கம் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் நியாயமான கோரிக்கைகளின் நிரைவேற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

அதேபோல் அரசியல் அழுத்தமும் காவல்துறைக்கு அதிகம் உள்ளதாக தெரிவித்த அவர்,அவர்களை சுதந்திரமாக செயல்படாமல் விடுவதே ஒரு மன அழுத்தம் தான் எனவும் தற்கொலைக்கு ஒரு தூண்டல் இருக்கும் அது என்னவென்று விசாரிக்க வேண்டும். எனவும் இதே மனநிலையில் பல காவல்துறை அதிகாரிகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக நானே இரண்டு மாநில பிரச்சனையும் pressure இல்லாமல் கடந்து போகிறேன் எனவும் நகைப்புடன் தெரிவித்தார். ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்ற எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளுநருக்கு போஸ்டர் ஒட்டி கண்டிக்க கூடிய போஸ்ட்டிங் கிடையாது எனவும் ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.

அளுநர்கள் அரசியல் பேசலாம். அரசியல் இல்லாமல் ஏதுவும் கிடையாது எனத் தெரிவித்த அவர் அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும்போது.
ஆட்சி தலைவர்களும் அரசியல் பேசலாம் என்றும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை பேசினால் அது அவருடைய கருத்து எனத்தெரிவித்த அவர், நீங்க சொன்னதை தான் ஆளுநர் பேச வேண்டும் என்பதை ஏற்றுகொள்ளமுடியாது.. அதேபோல் என்னை எதிலும் அடைக்கமுடியாது. எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் எனக்கும் – புதுவை முதல்வருக்கும் அண்ணன் – தங்கை உறவு தான் என்றும் புதுவையில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை எதிர்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை எனவே அவர்கள் தொடர் விமர்சனம் செய்வதாக பேசிய அவர், புதுவை புதுமையாக போகி கொண்டிருப்பாதகவும் அவர் தெரிவித்தார்.

Views: - 217

0

0